Thanu world: Batticaloa
Ebates Coupons and Cash Back
Showing posts with label Batticaloa. Show all posts
Showing posts with label Batticaloa. Show all posts

பாம்பா? மீனா? அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு கடலில் பெருந்தொகையில் சிக்கியது பாம்பா? மீனா? அச்சத்தில் மக்கள்


மட்டக்களப்பில் இன்றைய தினம் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ள பாம்புகளின் வருகை தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளது.

இது உண்மையில் பாம்பா? அல்லது மீன் இனமா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வருவதுடன், இதன் வருகையை ஆபத்தின் அறிகுறியாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். அது மட்டும் இன்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உண்மையில் இது ஒரு வகை மண் உழுவி பாம்பு இனம் என்றும் சிலர் ஆரல் மீன் எனவும் அழைப்பதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

ஆரல் மீனுக்கும் இந்த வகை பாம்பினத்திற்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால்தான் மக்கள் மத்தியில் ஒரு அச்ச சூழ்நிலை உருவாகியுள்ளது.

உண்மையில் இந்த வகை பாம்பினமானது சுனாமி வரும் முன்பும், மழை அதிகரிப்பதனாலும் ஆற்றில் இருந்து ஆற்று வாய் ஊடக கடலில் செல்வதாக கூறப்படுகின்றது.

கிழக்கில் ஒரு தடவை இந்த பாம்பினத்தை கல்லடி பாலத்தில் மக்கள் அவதானித்துள்ளனர். அதன் பின்னர் சுனாமி வந்ததாக மக்கள் கூறுகின்றனர்.



இவ்வாறான சம்பவங்கள், கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டாலும், உண்மை காரணம் அது அல்ல என்று வயது முதிர்ந்த மீனவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கிழக்கு மாகணத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக கல்லடிப் பாலத்தில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு இருந்ததனால் இந்த பாம்பினை மக்கள் கண்களால் காண முடியாத சூழ்நிலைகள் உருவாகியுள்ளது.

யுத்தம் முடிவடைந்ததும் காவல் அரண்கள் அகற்ற பட்ட போது , பாலத்தின் ஊடக மக்கள் பயமின்றி எந்த நேரமும் பிரயாணம் செய்யும் போது பாம்புகள் செல்வதை மக்கள் பார்ப்பதற்க்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த பாம்பு இனமானது பல ஆண்டுகளுக்கு முன் ஆற்று வாயில் வலை வீசிய மீனவர்களின் வலைகளை கூட இழுத்து சென்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த பாம்பினமானது கடலில் அதிக காலம் வழாது. உப்பு தன்மை அதிகரிக்கும் போது இவைகள் இறந்து கரையொதுங்குகின்றது.

இருந்தாலும் இது போன்ற அதிகளவிலான பாம்பினகள் கடலில் குறிப்பாக கரை வலையில் பிடிபட்ட சம்பவம் இதுவே முதல் தடவை என்றும் கூறுகின்றனர். இதற்கான உண்மை காரணம் என்ன என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களை தெளிவு படுத்த வேண்டியது தற்போது அவசியமாக உள்ளது.

கோரத் தாண்டவம் ஆடிய சுனாமியின் வடுக்களை சுமந்து இன்றும் பல துன்பங்களுக்கு மத்தியில் வாழும் சாதாரண வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பயப்படுவது யதார்த்தமான உண்மை.

எது எவ்வாறாக இருந்தாலும் சுனாமியின் பின் நீர் நிலைகளில் ஏற்படும் மாற்றம் மக்கள் மத்தியில் ஒரு அச்ச சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றது என்பதே இன்றைய நிலைப்பாடாக உள்ளது.



இது குறித்து மக்கள் அச்சம் அடைவதா? அல்லது வழமை போல இது இடம்பெறுகின்றதா? என்பதை யாராலும் சொல்ல முடியாது. இயற்கை சீற்றம் என்பது திடீர் என வருபவை எது எவ்வாறு இருந்தாலும் மக்கள் அவதானத்துடன் இருப்பது சால சிறந்தது.




-Tamilwin

16 days action argument against gender violence in Batticaloa (Tamil)

The first day of the 16 day action argument against gender violence was held in the arrangement of the Kavya Women's Self Development Center in Batticaloa.

The events which started at Mahatma Gandhi Park in Batticaloa town will be held on the 10th of this month, said organizer and head of Kavia Women's Self Development Center Yogamalar Ajith Kumar.

On Saturday morning, the event began with a white embroidery on the topic of eradicating violence against children.

In the continuum of the street, wearing white chairs and leaflets were distributed.

This activity will continue to be a continuous human rights day until December 10.

Yogamalar said various meetings and events have been arranged.

The 16-day action against gender violence committed by the Kavya Women's Self-Help Center has been implemented in 14 Divisional Secretariat Divisions in the Batticaloa District, an anti-gender violence against UNICEF worldwide.

The argument is being initiated to create a non-violent society in the village, region, district, national and global community when the non-violent housing environment is created.

All the communities who do not like violence in the world are on the forefront of their country's problems and needs, as of December 25, the day before Human Rights Day, December 10.

It is important to note that the 16 days of anti-gender violence in the Batticaloa district is carried out with state, non-government and public organizations.


(Tamil)



மட்டக்களப்பில் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டு வாதம் 


பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டு வாதத்தின் முதல் நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பில் காவியா பெண்கள் சுய அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு நகரின் மகாத்மா காந்தி பூங்காவில் ஆரம்பமான இந்த நிகழ்வுகள் எதிர்வரும் 10 ஆம் திகதிவரையில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளரும் காவியா பெண்கள் சுய அபிவிருத்தி நிலையத்தின் தலைவியுமான யோகமலர் அஜித்குமார் தெரிவித்தார்.

இன்றைய தினம் சனிக்கிழமை காலை பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் வெள்ளைப்பட்டிகள் அணிவிக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

தொடர்ச்சியாக வீதி வீதியாகச் சென்று வெள்ளைப்பட்டிகள் அணிவிக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இந்தச் செயற்பாடு தொடர்ச்சியாக எதிர்வரும் மனித உரிமை தினமாக டிசம்பர் 10 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

பல்வேறு சந்திப்புக்களும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாவும் யோகமலர் தெரிவித்தார்.

கடந்த 10 வருடங்களாக காவியா பெண்கள் சுய அபிவிருத்தி நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாடடு வாதமானது உலகளாவிய ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பால்நிலை வன்முறைக்கு எதிரான செயற்பாட்டு வாதம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

வன்முறையற்ற வீட்டுச் சூழல் உருவாக்கப்படும் போது கிராமம், பிரதேசம், மாவட்டம, தேசிய, உலகளாவிய ரீதியில் ஒரு வன்முறை அற்ற சமூகத்தினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இச் செயற்பாடடு வாதம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உலகிலுள்ள வன்முறையை விரும்பாத அனைத்து சமூகங்களும் நவம்பர் 25 ஆம் திகதியாகிய இன்று தொடக்கம் மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி வரையில் தங்களது நாட்டின் பிரச்சினைகள், தேவைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்து வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுகின்ற பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டு வாதத்தில் அரச, அரச சார்பற்ற, பொது அமைப்புக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

copy :- adaderana (google translate).


மட்டக்களப்பில் தகாத முறையில் நடந்துகொண்டதால் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் மாணவர்களின் நிலை

மட்டக்களப்பில் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட 7 பேரையும் 7 நாட்கள் விளக்கமறியளில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள பாடசாலையில் கல்வி பயிலும் இளைஞர் ஒருவர், வாழைச்சேனையில் கல்வி பயின்று மேற்படிப்பிற்காக மட்டக்களப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, தனது கல்வியை தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சம்பவங்களை அவதானித்த கிராமசேவகர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் 7 போரையும் கைது செய்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இதில், காத்தான்குடி கணிப ஹாஜியார் ஒழுங்கை, கிரின் வீதி காத்தான்குடி எனும் விலாசத்தில் வசித்து வந்த 3 பிள்ளைகளின் தாயுடன் மட்டக்களப்பு வெயிலி வீதியில் உள்ள ஒருவர் காதல் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே குறித்த வீட்டுக்கு அப்பெண் வந்துள்ளார், இந்த சுற்றிவளைப்பில் குறித்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த வீட்டை சுற்றிவளைத்த போது ஆண் உரைகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.

வாடகைக்கு வீடு எடுத்த சந்தேகநபருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும், அவரின் தாயார் வாழைச்சேனை பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.

குறித்த சந்தேகநபருக்கு கஞ்சா வைத்திருந்த காரணத்தால் 10,000 ரூபா அபராதமும் 7 நாள் விளக்கமறியலும், மற்றைய ஆறு பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாண்டவெளி, பாரதீ வீதி இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.


குறித்த வீட்டில் இது போன்ற முறையற்ற சம்பவங்கள் பல இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. குறித்த மாணவர்கள் தொடர்பான தகவல்களை வெளியாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் உயர்தரம் கற்று வருபவர்கள் எனவும் அவர்கள் குறித்த வீட்டில் கஞ்சா, சிகரட்டுகள் போன்ற போதைப்பொருட்களும் பாவித்து வந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 27 வயதுடைய பெண் காத்தான் குடியை சேர்ந்தவர் எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் கல்வி கற்பதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று குறித்த பெண்றோர் தனது மகனை கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் தனது நண்பர்களை இணைத்துக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த காலங்களில் பெரும் வறுமைக்கு மத்தியிலும் மாணவர்கள் படித்து உயர் நிலையை அடைந்த நிலையில், தற்போது செல்வம் காரணமாக மாணவர்களின் வாழ்வு சீரழிவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

 குறித்த மாணவரின் பெற்றோர் செல்வந்த நிலையில் இருப்பதால், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்த கிராம சேவகருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.







 copy by :- tamilwin

கிழக்கு மாகாணத்தில் திடீரென வற்றிப் போன கிணறுகள்! சுனாமி என பதறிய மக்கள்

கிழக்கு மாகாணத்திலுள்ள பல கிணறுகள் திடீரென வற்றிப் போனமையினால் மக்கள் பெரும் பீதியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்படவுள்ளதாக அஞ்சிய மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பகுதியிலும், அம்பாறை மாவட்டம் கல்முனை, பாண்டிருப்பு பகுதியிலும் கிணறுகள் திடீரென வற்றுத் தொடங்கியுள்ளன.

இந்தத் தகவல் பரவத் தொடங்கியதும் பல இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

எனினும் கிழக்கு மாகாணத்தில் சுனாமி ஆபத்து இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என நிலையத்தின் மாவட்ட பணிப்பாளர் எம்.றியாஸ் தெரிவித்துள்ளார்.


கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு ஏற்படுவதற்கு முன்னரும் திடீரென கிணறுகள் வற்றியுள்ளன. இதன்பின்னர் பாரிய சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.






















copy by :-tamilwin

அதிக பனி மூட்டம் மட்டக்களப்பில்.வழமைக்கு மாறாக (Tamil)

வழமைக்கு மாறாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலையில் இருந்து பனி மூட்டம் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, படுவான்கரைப் பிரதேசம், உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு பனிமூட்டம் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனால் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் சுமார் 30 மீற்றர் தூரத்திற்கப்பால் வீதி தெளிவில்லாத நிலைமை இருந்தது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் காடு சார்ந்த வயற் பிரதேசங்களில் நிலவிய பனி மூட்டம் பொழுது புலர்ந்த பின்னும் நீண்ட நேரம் நீடித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

copy by :- tamilwin

சுனாமி அனர்த்தம் ஏற்படவுள்ளதாக அஞ்சிய மக்கள் (Tamil)

கிழக்கு மாகாணத்திலுள்ள > பல கிணறுகள் திடீரென வற்றிப் போனமையினால் மக்கள் பெரும் பீதியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்படவுள்ளதாக அஞ்சிய மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பகுதியிலும், அம்பாறை மாவட்டம் கல்முனை, பாண்டிருப்பு பகுதியிலும் கிணறுகள் திடீரென வற்றுத் தொடங்கியுள்ளன.

இந்தத் தகவல் பரவத் தொடங்கியதும் பல இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.


எனினும் கிழக்கு மாகாணத்தில் சுனாமி ஆபத்து இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என நிலையத்தின் மாவட்ட பணிப்பாளர் எம்.றியாஸ் தெரிவித்துள்ளார்.


கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு ஏற்படுவதற்கு முன்னரும் திடீரென கிணறுகள் வற்றியுள்ளன. இதன்பின்னர் பாரிய சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.




copy by :-.tamilwin