Thanu world: tamil Movie Review
Ebates Coupons and Cash Back
Showing posts with label tamil Movie Review. Show all posts
Showing posts with label tamil Movie Review. Show all posts

நெஞ்சில் துணிவிருந்தால் விமர்சனம்

நெஞ்சில் துணிவிருந்தால் விமர்சனம்



சமுதாயத்தில் அவ்வப்போது நடக்கும் பிரச்னைகளை சினிமாவில் பதிவு செய்வது சுசீந்திரன் பாணி. ஜீவா படத்தின் விளையாட்டுத்துறை, மாவீரன் கிட்டுவில் சாதிப்பிரச்னை, ஆதலால் காதல் செய்வீர் பதின்பருவத்தினரின் உளவியல் சிக்கல்களை அலசியவர், இந்த முறை எடுத்திருக்கும் விஷயமும் மிக முக்கியமானது. சுசீந்திரனை இந்த விஷயத்துக்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால், இந்தமுறை அவர் கையாண்டிருக்கும் பிரச்னைதான் படத்தின் முக்கியமான சஸ்பென்ஸ் என்பதால், அதைத் திரையில் பார்த்துக்கொள்வதுதான் ஒரே வழி.

நெஞ்சில் துணிவிருந்தால்


பணத்துக்காக கொலைகள் செய்யும் வில்லன். அவர்களிடம் சிக்கும் ஹீரோ & டீம். முடிவு என்ன என்பதுதான் நெஞ்சில் துணிவிருந்தால். ஒரு நடுத்தரக் குடும்பம், வில்லன், வில்லனின் பிரச்னையில் இவர்களை சிக்கவைப்பது என சுசீந்திரனின் டெம்ப்ளேட் ஃபார்முலாதான்.
கேட்டரிங்கில் வேலை பார்க்கும் நண்பர்கள் சுந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி. தனக்கு வரும் ஒவ்வொரு கொலை அசைன்மென்ட்டையும் எந்தவித தடயமும் இல்லாமல், கொன்று முடிக்கும் ஹரிஷ் உத்தமன் & டீம். அசைன்மென்ட், பிளாக்மெயில், பெத்த லாபம், கொலை என போலீஸுக்கே தெரியாமல் வாழ்கிறார் ஹரிஷ் உத்தமன். ஒரு குறிப்பிட்ட அசைன்மென்ட்டில் சுந்தீப் கிஷன், விக்ராந்த இரையாக, அடுத்த என்ன என்பதை ட்விஸ்ட்டுடன் சொல்ல முயன்றிருக்கிறார் சுசீந்திரன்.

முதல்பாதி முழுவதும் சொதப்பல்கள். எப்போதும் காதல் காட்சிகளை சுவாரஸ்யமாக எடுக்கும் சுசீந்திரன், இந்தமுறை தவற விட்டிருக்கிறார். எரிச்சலூட்டும் ஆரம்பக்கட்ட காட்சிகள் படத்தின் மீதே ஒவ்வாமையை ஏற்படுத்திவிடுகிறது. சுந்தீப் ஜோடியாக மெஹ்ரீன் பிர்சடா என்பவரை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள். படத்தில் அவர் இருப்பதே மறந்துவிடுகிறது.

தாடி, கைலி, நீள சிகரெட் என அள்ளு கிளப்புகிறார் ஹரிஷ் உத்தமன். ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை அமர்க்களம் செய்திருக்கிறார். ஹீரோவாக சுந்தீப் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் க்ளிஷேவைத் தவிர்க்க சுந்தீப், விக்ராந்த் இருவருக்குமே, கம்பிகளைக் கொடுத்து அடிக்க சொல்லியிருப்பது ஸ்மார்ட் சாய்ஸ்.

நெஞ்சில் துணிவிருந்தால்

பாடலை வலிந்து திணித்த காலம் போய், பாடலுக்காக ஒரு நண்பன், அவனுக்கு ஒரு கல்யாணம், அங்கு ஒரு பிரிவு, அதற்கு ஓர் அட்வைஸ் என ஒரு பாடலுக்கு யூ டர்ன் போட்டு டேபிளை உடைப்பதெல்லாம் டூ மச். இடைவேளை சீக்வென்ஸுக்காக முதக்பாதி முழுவதையும் அடகுவைத்துவிட்டு, அந்தக் கணம் வரும்போது பாதியில் இடைவேளை என்கிறார்கள். பாப்கார்ன் சாப்பிட்டுவிட்டு வந்தால், விட்ட மொமெண்ட்டம் திரும்பவா கிடைக்கும்? அதன் பிறகு இறுதி 10 நிமிடங்கள் முன்பு வரை டிபிக்கல் சுசீந்திரனின் தரமான கிளாஸ் மேக்கிங்.

படத்தின் இன்னொரு மிகப்பெரிய பிரச்னை, சுசீந்திரன் படங்களில் எப்போதும் வரும் எவெர்க்ரீன் நட்சத்திர பட்டாளம். நான் மகான் அல்ல படத்தில் வரும் வில்லன் கோஷ்டி, தாஸ், துளசி, டி.சிவா என அதே டெய்லர் மேட் கதாப்பாத்திரங்கள். எப்படியும் இவர்களின் கதாப்பாத்திரம் இப்படித்தான் இருக்கும் என்பதை முன்னரே தீர்மானிக்க வைக்கிறது. சுசீந்திரன் திரைக்கதை யுக்தியை மாற்ற வேண்டிய நேரமிது.

நெஞ்சில் துணிவிருந்தால்

கச்சச்ச கச்சச்ச கச்சச்ச கா, சிக் சிக் சிக் என படத்தில் வரும் இரு பாடல்களும் இமானின் ரிப்பீட். பாடல்களில் சொதப்பியிருக்கும் இமான், பின்னணி இசையில் கவர்கிறார். சாதாரண காட்சிகளைக் கூட மேம்படுத்திக் காட்டுகிறது பின்னணி இசை. அன்பறிவின் சண்டைக்காட்சிகள் பதற்றத்தைக் கூட்டுகின்றன. அதுவும், அந்த க்ளைமாக்ஸ் சண்டை... சுசீந்திரன் டச். ஆனால், அந்த உடும்புப்பிடி தான் படத்தில் வரும் ஒரே காமெடிக்காட்சி. சாரி சூரி. மாறி மாறி வரும் திரைக்கதை டெம்போவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறது கேமரா.


பிரச்னைகளின் காரணங்களை தனது ஷார்ப் வசனங்கள் மூலம் சொல்வதுதான் சுசீந்திரனின் வழக்கம். இந்தமுறை ஏனோ வாட்சாப் பார்வர்டுகளுக்கு பலிகடா ஆகியிருக்கிறார். நண்பன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது, ஹீரோ உச்சஸ்தாயியில் 53% போலி டாக்டர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என பேசுவதெல்லாம் படத்தோடு ஒன்றவில்லை. ஹ்யூமர், ரொமான்ஸ், நட்பு, ஆக்ஷன், த்ரில்லர் எனக் காம்போ படையல் செய்ய நினைத்திருக்கிறார் சுசீந்திரன். ஆக்ஷனும், த்ரில்லரும் பாஸாக, மற்றவை எல்லாம் அரியர் வைத்துவிட்டன. 

Download:
Nenjil Thunivirundhal (2017) HQ Real 1080p DVDScr - 2.5GB - Original Audio

அறம் விமர்சனம்

அறம்   விமர்சனம்


ஒருபக்கம், மினரல் வாட்டரை கேன் கேனாக குடித்துக் களிக்கும் மாடர்ன் இந்தியா, மறுபக்கம் ஒரு மடக்குத் தண்ணீருக்காக பல மைல்கள் நடக்கும் புறக்கணிக்கப்பட்டவர்களின் இந்தியா. முன்னவர்களுக்குப் பின்னவர்கள் இருப்பது பற்றிய பிரக்ஞையே இல்லை. அப்படி மறந்துபோன மக்களின் ஆன்மாவாக ஒலிக்கும் குரலே 'அறம்'. 

தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில், ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து கிளம்பும் ராக்கெட் கனல்கள் தெறித்துவிழும் தூரத்தில் இருக்கும் கிராமம் காட்டூர். வியர்வைகூட துளிர்த்த உடனே வறண்டுபோகும் அளவுக்கு வறட்சி அங்கே தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீருக்காக பல மைல்கள் நடக்கவேண்டிய நிலை. ஆனாலும், இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள் ராமசந்திரன் துரைராஜ் - சுனு லஷ்மி தம்பதியினர். ஒருநாள், சுனு விறகு வெட்டப் போகும்போது, எதிர்பாராதவிதமாக அவரின் நான்கு வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுகிறது. குழந்தையை மீட்க முயற்சிக்கும் மாவட்ட ஆட்சியரான நயன்தாரா, துணிந்து சில முடிவுகளை எடுக்கிறார். அந்த முயற்சிகள் பலனளித்ததா? பிஞ்சுக் குழந்தை உயிரோடு மீண்டதா, பிரச்னைகளுக்குப் பின்னால் இருந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் நோக்கம் என்ன என்பதுதான் கதை.



ஆழ்துளைக் கிணற்று அவலங்களை வைத்து கதை பின்னியதில் ஸ்கோர் செய்யும் இயக்குநர் கோபி நயினார், அதில் பொருத்தமான நடிகர்களை நடிக்கவைத்ததன்மூலம் சிக்ஸர் அடிக்கிறார். இதுவரை துணை நடிகராக வலம் வந்த ராமசந்திரனுக்கு, இதில் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும் கனமான பாத்திரம். அசராமல் தூக்கிச் சுமக்கிறார். அவருக்கு சளைக்காமல் நடித்திருக்கிறார் சுனு லஷ்மி. ஒன்றிரண்டு காட்சிகளே வந்தாலும் பழனி பட்டாளம் பேசும் வசனங்கள் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகின்றன.

நயன்தாரா, ஹீரோவை துரத்திக் காதலிக்கும் காட்சிகள், ஜிகுஜிகு ஆடைகள் போன்றவற்றிலிருந்து பெரிய பிரேக் அவருக்கும் நமக்கும். ஹீரோக்கள் அரசியல் பேசும் காலத்தில், ஹீரோயினையும் அரசியல் பேசவைத்த இயக்குநர் கோபி நயினாருக்கு சல்யூட். அவர் உருவாக்கிய கேரக்டருக்கு, கச்சிதமாக உயிர் பாய்ச்சியிருக்கிறார் நயன்தாரா. அவர் கரியரில் மிக முக்கியமான படம் இது.  கடமையைச் செய்யவிடாமல் தடுத்த எம்.எல்.ஏ-வை முறைத்துவிட்டு கெத்தாக நடப்பது, குழந்தையை கேமராவின் வழி பார்க்கும்போதெல்லாம் இயலாமையில் புழுங்குவது என அசரடிக்கிறார். அதுவும் க்ளைமேக்ஸில் மொத்தக் கூட்டத்திலிருந்தும் பிரிந்து, தனியாக வெடித்துக் கதறும்போது... க்ளாஸ். இனியும் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் என்ன செய்தீர்கள் என நயனை யாரும் கேள்வி கேட்க முடியாது.

கதை, திரைக்கதையில் மட்டுமல்ல, காட்சி அமைப்பிலும் அத்தனை இயல்பைக் கூட்டுகிறார் இயக்குநர். குறிப்பாக, உச்சி வெயிலில் பிளாட்டுகளுக்கு கற்கள் நடும் இடம். ‘இந்த இடமே எவ்ளோ பசுமையா இருந்தது’ எனப் பேசிக்கொள்ளும் பெயின்டர்கள். ‘இருக்கிற எல்லா மரங்களையும் அழிச்சு கதவு, ஜன்னல் செஞ்சுட்டு வீட்டுக்குள்ள காத்து வரலைனு பொலம்புறானுங்க’ எனப் பேசும் வசனம் அழகு.

அறம்

வாழ்வாதாரத்துக்கு தண்ணீரே இல்லாத கிராமத்துக்கு அருகே, இந்திய அரசு விண்வெளிக்கு ராக்கெட் செலுத்துகிறது. ராக்கெட் எதற்காக செலுத்தப்படுகிறது என்கிற நோக்கம் தெரியவில்லை என்றாலும், ‘அது, நம்ம நாட்டிற்குப் பெருமைதானே… அதுக்காக சாமி கும்பிடுவோம்’ என வெள்ளந்திப் பேச்சு பேசும் மனிதர்கள். அந்த மக்களுக்குத் தண்ணீர் வழங்காமல்தான், பக்கத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கும் தண்ணீர் லாரி சென்றுகொண்டிருக்கிறது. அடித்தட்டு மக்களுக்கு அரசு காட்டும் கரிசனம் இதுதான் என்பதைப் பொட்டில் அடித்துக் கடக்கிறது அந்தத் தண்ணீர் லாரி.
‘ஆள்துளைக் கிணறு’ என்ற சிறிய களத்தை வைத்துக் கடல் அளவு கேள்விகளை எழுப்புகிறார், இயக்குநர். அதிகாரம், அரசு அதிகாரியான நயன்தாராவிடம் கேள்வி கேட்கிறது. அப்பாவி மக்கள், அதிகாரத்திடம் தங்களுடைய உரிமைக்காக, உயிருக்காக கேள்வி கேட்கிறார்கள். அரசு அதிகாரியான நயன்தாரா, சக அதிகாரிகளிடம் அதிகாரத்தை மீறிச் செயல்படுவதைக் குறித்து கேள்விகளைக் கேட்கிறார். காட்சிகள் மூலம் கதை சொல்லும் உத்தி இயக்குநருக்கு நன்றாக கைவந்தபோதும், தொலைக்காட்சி விவாதம் மூலம் சொல்லும் நியாயங்கள் தேவையற்றவை. படத்தை விட்டு விலகியும், பொறுமையை சோதிப்பதாகவுமே இருக்கின்றன.

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. 'களவாணி', 'வாகை சூட வா' என கிராமத்துக் களங்களில் விளையாடிப் பழக்கப்பட்ட ஓம்பிரகாஷ், இதில் டபுள் செஞ்சுரி அடிக்கிறார். ஒவ்வொருமுறையும் கேமரா, ஆழ்துளைக் கிணற்றின் இருட்டில் இறங்கும்போதும் நம்மையே கயிற்றைக் கட்டி இறக்குவதுபோல அடிவயிறு கவ்வுகிறது. நீரின்றிக் காய்ந்து வறண்ட நிலப்பகுதியையும், அந்நிலத்தின் மக்களையும் ஒருவித இருள் சூழ்ந்த ஒளியில் படமாக்கியிருக்கும் ஓம்பிரகாஷின் உழைப்பு அபாரம். ஓம்பிரகாஷின் ஒவ்வொரு ஷாட்டும் நம்மையும் படத்தில் ஒரு பங்கேற்பாளராக மாற்றியிருக்கிறது… அவ்வளவு மெனக்கெடல்.  முன் பின் எனப் பயணிக்கும் திரைக்கதை என்பதால், ரூபனின் எடிட்டிங்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அறம்

அரசியல்தான் இப்படத்தின் ஆணிவேராக இருந்தாலும், ‘எமோஷனல் திரில்லர்’ ஜானரைப் புகுத்தி, அதில் பதறவைக்கும் ஒரு அழுத்தமான சம்பவத்தைச் சொல்லி கதை நகர்த்துகிறார், இயக்குநர். இதுவே, இப்படத்தை வெறும் பிரசாரப் படமாக இல்லாமல், அனைவருக்குமான படமாக மாற்றுகிறது. முதல் அரை மணிநேரம் இலக்கே இல்லாமல் பயணிக்கும் திரைக்கதையில், லேசாக நாடகத்தனம் தெரிகிறது. அதன்பின் ஒரு கு(ழி)வியில் மையம்கொள்ளும் திரைக்கதை விறுவிறு வேகம் பிடிக்கிறது. பின்னணி இசையிலும் பாடலிலும் உருக்குகிறார் ஜிப்ரான். ‘தோரணம் ஆயிரம்…’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பே ஹிட். அதைக் கதையோடும் காட்சி அமைப்புகளோடும் பார்க்கும்போது இன்னும் பரிதவிப்பு கூடுகிறது.

குழியில் கிடக்கும் தங்கள் குழந்தையைப் பார்த்துப் பரிதவிக்கும் பெற்றோரின் கண்ணீரை அவ்வளவு சாதாரணமாகக் கடக்க முடியவில்லை. 90 அடிக்கும் அதிகமான ஆழத்தில் சிக்கித் தவிக்கும் குழந்தை, தன் பெற்றோரிடம் பேச முயற்சிக்கும் இடமும், நயன்தாராவுக்கும் அந்தக் குழந்தைக்குமான உரையாடலையும் கணத்த இதயத்தோடுதான் கடக்கவேண்டியிருக்கிறது. ‘ஜட்டியில கொக்கி மாட்டி இழுத்துடலாம் மேடம்’ எனத் தீயணைப்புத்துறை அதிகாரி சொல்ல, ‘வேணாம்யா… அது 10 ரூபாய்க்கு வாங்குன ஜட்டி சாமி’ எனக் கதறும் தாயைப் பார்க்கும்போது கண்ணீர் முட்டுகிறது. படம் முழுக்க பரிதவிப்புகளை உணர்வு மாறாமல் கடத்திய அளவிற்கு, வசனங்களும் பாதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தவிர, படத்தில் இருக்கும் அனைவருமே கருத்து சொல்லிக்கொண்டிருப்பது கொஞ்சம் நெருடல்!

Download :