மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, அண்மைக் காலங்களாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, வடக்கின் பிரதான மாவீரர் தினம் கிளிநொச்சி - கணகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை மையப்படுத்து இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களுக்கு அருகிலும், இதுபோன்று நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கின் பிரதான மாவீரர் தின நிகழ்வு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
கனகபுரம் மாவீரர் நிகழ்வுகள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, அப் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தயாராகி வரும் மக்கள்
-tamil.adaderana
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Write comments