கடும் மழை காரணமாக காலியில் பலத்த சேதம்
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக காலியில் பலத்த மழை கொட்டும் நிலையில் பொதுமக்களுக்கு கடும் சேதமும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாதைகளில் நீர் நிரம்பி போக்குவரத்தும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் காலி நகருக்குள் கடும் மழை மற்றும் வேகமான காற்று காரணமாக சுமார் 23 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மேலும் 600க்கும் மேற்பட்ட வீடுகள் ஓரளவு சேதத்தை எதிர்கொண்டுள்ளன.
இதன் காரணமாக 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டும் ஒருசிலர் வேறிடங்களுக்கு இடமாற்றப்பட்டும் இருப்பதாக காலி மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Tamilwin
-Tamilwin
No comments:
Write comments